சம்பூரில் மாவீரர் நினைவு தினத்தை நடத்த தடை : திருகோணமலை உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக அறிவிப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சம்பூரில் மாவீரர் நினைவு தினத்தை நடத்த தடை : திருகோணமலை உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக அறிவிப்பு!

சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் மாவீரர்தின நினைவு தினத்தை ஏற்பாடு செய்திருந்த நினைவுநாள் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் உள்ளிட்ட 17 நபர்களுக்கு மூதூர் நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.  

இந்நிலையில் அவர்கள் அனைவரையும் சம்பூர் பொலிஸார் இன்று (25.11) மாலை சம்பூர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பேசியிருந்தனர்.   

இதன்போது நீங்கள் யாரும் மாவீரர்தின நினைவுநாள் செயற்பாட்டில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவீர்கள் என்று பொலிஸார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இந்த தடையை நீக்குவதற்காக திங்கட்கிழமை திருகோணமலை உயர் நீதிமன்றை நாடவுள்ளதாகவும் சம்பூர் மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் க.காண்டீபன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!