வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து - ஐவர் வைத்திசாலையில்!
#SriLanka
#Vavuniya
#Accident
PriyaRam
2 years ago
மோட்டார் சைக்கிள் மீது தேங்காய் ஏற்றிச்சென்ற ஜீப் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தானது பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றிருந்தது.
விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில், நகர்ப் பகுதியில் இருந்து மூன்று முறிப்பு நோக்கி சென்ற ஜீப் ரக வாகனம் முன்னே சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஜீப் ரக வாகனத்தில் பயணித்த ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
