மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியது!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பஸ் ஒன்று இரத்மலானை கொலுமடம சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்தின் நடத்துனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேருந்தின் பிரேக் செயலிழந்ததன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.