இலங்கை அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வை ஜனவரி முதல் அமுல்படுத்த திட்டம்!
இலங்கையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை 5,000 ரூபாவினாலும், ஓய்வூதியத்தை 2,500 ரூபாவினாலும் ஜனவரி மாதத்தில் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாகவும் கூறினார்.
“அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும், குறைந்தபட்சம் அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரை குறைந்தது 5,000 ரூபாயாவது வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதற்கு மாதாந்தம் 65,000 ரூபா தேவை எனக் கூறிய அவர், மேலதிகமாக 2,500 ரூபாயை ஜனவரி மாதம் முதல் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அதற்கும் 18,000 ரூபாய் வேண்டும் எனவும் கூறினார்.
சுமார் ஏழு லட்சம் அரசு ஓய்வூதியர்கள் உள்ளனர். இதை ஜனவரி முதல் வழங்க கடுமையாக முயற்சி செய்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.