நாட்டின் சட்டத்தை புறந்தள்ளும் வகையில் செயற்படும் அமைச்சரவை!
#SriLanka
#Parliament
#Sajith Premadasa
#Srilanka Cricket
PriyaRam
2 years ago
விளையாட்டு சட்டத்தின் கீழ் இடைக்கால குழுக்களை ஸ்தாபிக்கும் அதிகாரம் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு இருந்தாலும், அமைச்சரவையின் ஒப்புதலின் பின்னரே அவ்வாறான இடைக்கால குழுவை நியமிக்க முடியும் என அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த தீர்மானத்தின் மூலம் நாட்டின் சட்டத்தைக் கூட புறந்தள்ளும் வகையில் அமைச்சரவை செயற்பட்டுள்ளதாகவும், இவ்வாறு நாட்டின் சட்டத்தை கூட அமைச்சரவையால் மீற முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.