கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்!
முல்லைத்தீவு - கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது வீதியின் ஊடாகவும் ஏனைய பகுதிகளின் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள், ஐந்தாவது நாளாக நேற்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த, முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் அகழ்வின் போது நான்கு மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய இதுவரையில் 30 மனித உடற்கூற்று தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் ஸ்கேனர் இயந்திரம் மூலம் இந்த மனித புதைகுழியின் ஆழம் தொடர்பில் நேற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் முடிவுகள் இன்றைய தினம் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.