உள்ளுர் சீனி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
உள்ளுர் சீனி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை!

உள்ளுர் சீனி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் சீனி தேவையை பூர்த்தி செய்வதற்கான திட்டங்களை தயாரித்து வருவதாக செவனகல சீனி நிறுவனம் அறிவித்துள்ளது.  

சீனி உற்பத்தியை அதிகரிக்க பயன்படும் கரும்பு வகைகளை கண்டுபிடிப்பது தொடர்பான அவதானிப்புகள் இந்த நாட்களில் முன்னெடுக்கப்படுவதாக அதன் பிரதம செயற்பாட்டு அதிகாரி  கலும் பிரியங்கர லியனகே கூறியுள்ளார். 

இதனிடையே, அடுத்த ஆண்டு சர்க்கரை உற்பத்தியை அதிகரிப்பதற்கான செயல்திட்டத்தை மூன்று மாதங்களுக்குள் தயாரித்து சமர்ப்பிக்குமாறு சரக்கு மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.  

நாட்டு மக்களுக்கு சீனி நுகர்வு தொடர்பில் மிகக்குறைவான அறிவே உள்ளதால், சீனி நுகர்வு முறை தொடர்பில் முறையான வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு குழு பணிப்புரை விடுத்துள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!