பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறிய சிராஜ்

#Cricket #sports #Player #Award #Indian #ICC
Prasu
10 months ago
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறிய சிராஜ்

ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது.

பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரர் சுப்மன் கில் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்தியாவின் முகமது சிராஜ் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் 2வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா 3வது இடத்திலும் உள்ளனர்.

 இந்தியாவின் குல்தீப் யாதவ் 4வது இடத்திலும், பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடி 5வது இடத்தில் உள்ளனர். இந்திய வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா 8வது இடத்திலும், முகமது ஷமி 10வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!