பிரசன்ன ரணதுங்கவின் பெயரைப் பயன்படுத்தி சட்ட விரோத செயல் - பொலிஸாரின் நடவடிக்கை!

#SriLanka #land #pirasanna ranathunga
PriyaRam
2 years ago
பிரசன்ன ரணதுங்கவின் பெயரைப் பயன்படுத்தி சட்ட விரோத செயல் - பொலிஸாரின் நடவடிக்கை!

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பெயரைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் கலல்கொட பிரதேசத்தில் காணிகளை நிரப்பிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தலவத்துகொட, கலல்கொட பிரதேசத்தில் சட்டவிரோதமாக காணி சுவீகரிப்பு இடம்பெறுவதாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கெக்கிராவ மற்றும் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்களிடமிருந்து டிப்பர் இயந்திரம் மற்றும் மண் அகழ்வு இயந்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

images/content-image/2023/11/1699417689.jpg

இந்நிலையில் குறித்த நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இவ்வாறான அனுமதியற்ற காணி நிரப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இதனையடுத்து கூட்டுத்தாபனத்தின் விசேட நடைமுறையாக்கல் பிரிவு 24 மணி நேரமும் செயற்படவுள்ளதாகவும், ஏதேனும் ஒரு பிரதேசத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் அல்லது மீள் நிரப்பு நடைபெற்றால், அதுபற்றி பொதுமக்கள் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு 011-2885357 அல்லது 011-2868002 ஆகிய எண்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி அறியப்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!