மாயாதுன்னவில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மாயாதுன்னவில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்!

அம்பாறை, பண்டாரதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாயாதுன்ன பகுதியில் நபர் ஒருவர் நேற்று (06.11) இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மாயதுன்ன, வரங்கடகொட பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாற சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 

உயிரிழந்த நபர் வீட்டின் பின்னால் நீந்திக் கொண்டிருந்த போது, ​​நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 நெற்காணி தொடர்பான தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சடலம் பொலிஸ் பாதுகாப்பில் சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.  

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பண்டாரதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!