நாட்டை மீட்டெடுப்பதற்கு எம்மால் மட்டுமே முடியும் - ஜே.வி.பி!
#SriLanka
#srilankan politics
#Economic
PriyaRam
2 years ago
நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் வல்லமை மக்கள் விடுதலை முன்னணிக்கு மாத்திரமே உண்டு என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரணில் ராஜபக்ஸ தரப்பினர் தொடர்ந்தும் நாட்டை அதள பாதாளத்திற்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளையே முன்னெடுத்துள்ளனர், இதனால் நாடு தொடர்ந்தும் பின்னடைவையே சந்திக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், நாட்டு மக்கள் முறையான தலைவர்களை தெரிவு செய்யாவிட்டால் எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் புதிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். தற்போதைய நிலையில் மக்கள் விடுதலை முன்னணியை தவிர வேறு கட்சிகளுக்கு அத்தகைய தகுதி இல்லை என்றும் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவித்துள்ளார்.