இலங்கை கிரிகெட் அணியின் தொடர் தோல்வி : ரொஷான் ரணசிங்க பிறப்பித்துள்ள உத்தரவு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கை கிரிகெட் அணியின் தொடர் தோல்வி : ரொஷான் ரணசிங்க பிறப்பித்துள்ள உத்தரவு!

இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு இலங்கை கிரிக்கெட் சபையும் கிரிக்கெட் தெரிவுக்குழுவும் பொறுப்பேற்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அறிவித்துள்ளார். 

உலகக்கிண்ண போட்டியில் இந்தியாவிற்கு எதிராக விளையாடியபோது இலங்கை அணி தோல்வியடைந்தது. இது இரசிகர்கள் மத்தியில் இலங்கை அணியின் எதிர்காலம் குறித்த கவலையை எழுப்பியுள்ளது. 

இந்நிலையில், இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க வெளியிட்டுள்ள அறிக்யைில்,   இலங்கை அணியின் தொடர் தோல்விகளால் கிரிக்கெட்டை நேசிக்கும் அனைவரும் வருத்தமும் கவலையும் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதற்குப் பொறுப்பானவர்கள் உரிய இடத்தில் கிரிக்கெட் நிர்வாகத்தில் இருந்து விலக வேண்டும் என்றும், பேதைகள் போல் நடந்து கொள்ளாமல், கடுமையான நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!