மன்னாரில் நீண்ட கால போதைப் பொருள் கடத்தல் சந்தேகநபர் கைது!

#SriLanka #Sri Lanka President
Mayoorikka
2 years ago
மன்னாரில் நீண்ட கால போதைப் பொருள் கடத்தல் சந்தேகநபர் கைது!

மன்னாரில் நீண்ட காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 இச்சம்பவம் மன்னார் தாராபுரம் கிராமத்துக்கு அருகாமையில் நேற்று புதன்கிழமை (01) இரவு 9 மணியளவில் நடைபெற்றதாக போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,

 இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மன்னார் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது இச் சந்தேக நபர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

images/content-image/2023/11/1698915921.jpg

 மன்னார் தாழ்வுபாடு பகுதியில் இருந்து தாராபுரத்திற்கு இப் போதைப் பொருளை கொண்டு வந்த வேளையில் இந்த நபர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 5150 போதைப்பொருள் மாத்திரைகள் உடனே 30 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இப் போதைப்பொருள் மாத்திரைகள் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக கொண்டு வந்துள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது.

images/content-image/2023/11/1698916027.jpg

 கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் மாத்திரைகளையும் மேலதிக விசாரணைக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!