ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள 'பார்க்கிங்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியீடு

#India #Cinema #Actor #Actress #TamilCinema #2023 #ImportantNews
Mani
2 years ago
ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள 'பார்க்கிங்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியீடு

இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் 'பார்க்கிங்' படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார். திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரிக்கிறார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.

இந்த படத்தில் இந்துஜா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார், ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் 'பார்க்கிங்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, படக்குழுவினர் போஸ்டரை வெளியிட்டு, படம் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது. இந்த போஸ்டரை ஹரிஷ் கல்யாண் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!