ஜெய் நடிக்கும் ‘லேபிள்’ வெப் தொடர் நவம்பர் 10ல் ரிலீஸ்

#India #Cinema #Actor #Actress #TamilCinema #2023 #Tamilnews #ImportantNews
Mani
2 years ago
ஜெய் நடிக்கும் ‘லேபிள்’ வெப் தொடர் நவம்பர் 10ல் ரிலீஸ்

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள ‘லேபிள்’ வெப் தொடர் வரும் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது. ‘கனா’, ‘நெஞ்சுக்கு நீதி’ ஆகிய படங்களை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள புதிய வெப் தொடர் ‘லேபிள்’. இந்தத் தொடரில் ஜெய், தன்யா ஹோப், மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தத் தொடருக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுத்தாளராக பங்களித்துள்ள இத்தொடருக்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

‘நெஞ்சுக்கு நீதி’ படம் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை பேசிய அருண்ராஜா காமராஜ், இத்தொடரின் மூலம் வடசென்னையை பின்னணியாக கொண்ட கதைக்களத்துடன் களமிறங்கியுள்ளார். இந்த தொடர் வரும் நவம்பர் 10ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!