நடிகர் விக்ரமின் 62வது படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது

#India #Cinema #TamilCinema #2023 #Tamilnews #Breakingnews #Movie
Mani
10 months ago
நடிகர் விக்ரமின் 62வது படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது

சீயான் என்று தமிழ் சினிமா ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விக்ரமின் 62வது படம் குறித்த அறிவிப்பு இன்று (அக் .28) மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குநர் ,குறித்தும் , நடிகர்கள் குறித்தும் பல தகவல் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் அறிவிப்பு மாலை 6 மணிக்கு விக்ரம் மற்றும் படக்குழுவினர் இணைந்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்திற்குப் பின் நடிகர் விக்ரம் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், விக்ரம் தற்போது பா .ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் “தங்கலான் ” படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது.