'தங்கலான்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியீடு
#India
#Cinema
#Actor
#Actress
#TamilCinema
#release
#2023
#trailer
#Tamilnews
#Movie
Mani
2 years ago
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தங்கலான்'. இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி மற்றும் பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எப். படத்தின் குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 'தங்கலான்' படத்தின் வெளியீடு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் எழுந்துள்ளது.