நடிகர் நானியின் 31-வது படத்தின் பெயர் படக்குழு அறிவிப்பு
#India
#Cinema
#Actor
#TamilCinema
#Director
#2023
#Tamilnews
#Movie
Mani
2 years ago
பிரபல தெலுங்கு நடிகரான நானி, வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். நானியின் 31-வது படத்தை இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். இதில், நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் இணைந்துள்ளார். மேலும், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
டிடிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'சூர்யாவின் சனிக்கிழமை' என்று படக்குழு தலைப்பு வைத்துள்ளது.
மேலும், இது தொடர்பான போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளது. நானி கையில் விலங்குடன் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.