இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து!
#India
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இந்தியாவின் தூத்துக்குடி சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சேவை ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட நிலையில், மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டு நிறுவனங்கள் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க விருப்பம் தெரிவித்துள்ளன. அத்துடன் குறித்த நிறுவனங்கள் இலங்கையில் அனுமதி பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தூத்துக்குடி சிதம்பரனார் துறைமுகத்தை மையமாக கொண்டு பல்வேறு இடங்களுக்கு கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க தனியார் நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.