லியோ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை!
#India
#Cinema
#Actor
#Actress
#TamilCinema
#2023
#Tamilnews
Mani
2 years ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ள லியோ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தை நாளை முதல் 24ம் தேதி வரை காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் லியோ படத்தை இணையதளத்தில் வெளியிட தடை கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவில், 'லியோ' திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே படம் திருட்டுத்தனமாக இணையதளங்களில் ரகசியமாக வெளியிட்டால், பெரும் நஷ்டம் ஏற்படும். இதனால் திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். எனவே சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி, அதில் கூறப்பட்டிருந்தது.