ஹர்த்தால் தொடர்பாக வவுனியா நகரில் துண்டுப்பிரசுரம் விநியோகம்!

#SriLanka #Vavuniya #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஹர்த்தால் தொடர்பாக வவுனியா நகரில் துண்டுப்பிரசுரம் விநியோகம்!

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் போராட்டம் தொடர்பாக தமிழ்த்தேசியகட்சிகளின் கூட்டமைப்பால் வவுனியா நகரில் துண்டு பிரசுரங்கள் இன்று (18.10)  வழங்கி வைக்கப்பட்டன. 

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா மீதான அச்சுறுத்தலின் மூலம் நீதித்துறை சுயாதீனமாக செயற்பட முடியாத நிலமை, வடக்கு கிழக்கில் பௌத்தமயமாக்கல், தமிழர் பிரச்சனைக்கு உள்நாட்டில் நீதியை காணமுடியாது போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடங்கி 20ம்திகதி வெள்ளிக்கிழமை ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது. 

images/content-image/1697629374.jpg

இந்நிலையிலேயே துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன்போது வன்னி மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நகரசபை தலைவர் இ.கௌதமன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ. மயூரன், முன்னாள் நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

images/content-image/1697629428.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!