தமிழில் எழுதும் போது கவனிக்க வேண்டியவை.........!

#Tamil #Lifestyle #life
Mayoorikka
2 years ago
தமிழில் எழுதும் போது கவனிக்க வேண்டியவை.........!

தமிழில் எழுதும் போது கவனிக்க வேண்டியவை.........

1. வாழ்த்துக்கள் என்பது தவறு. ‘வாழ்த்துகள்‘என்பதே சரி. ‘க்‘ வரக்கூடாது. 

2. வாழ்க வளமுடன் என்பது தவறு. ‘வாழ்க வளத்துடன்‘ என்பதே சரி. 

3. ‘நிகழும் மங்களகரமான ஆண்டு‘ என்று அழைப்பிதழில் அச்சிடுவது தவறு. ‘மங்கலகரமான‘ என்பதே சரி. ‘மங்கள இசை‘ என்றால் ஒப்பாரி. அதாவது கடைசிப் பயணத்தின் போது இசைப்பது. ‘மங்கல இசை ‘ என்றால் தொடக்கம். ( துவக்கம் என்பது தவறு ). 

இசை நிகழ்ச்சியில் கடைசியில் பாடும் பாட்டுக்கு ‘மங்களம்‘ என்பர். கச்சேரியை முடிப்பதற்கு மங்களம் பாடு என்பர். 

ஒரு நூல் (புத்தகம்) எழுதிய ஆசிரியர் அதை எழுதி முடிக்கும்போது கடைசிப் பக்கத்தில் ‘சுப மங்களம்‘ என்று முடிப்பார். இனிதே முடிவுற்றது என்று பொருள்.

 ஆரியர்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தை பெண்ணாகப் பிறந்து இனி குழந்தையே வேண்டாம் என்று முடிவெடுத்தால் அப்பெண் குழந்தைக்கு ‘மங்களா‘ என்று பெயர் சூட்டுவர். 

images/content-image/2023/10/1697625757.jpg

இத்துடன் போதும் என்று பொருள். திருவள்ளுவர் தம் குறளில், மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கள் பேறு – என்று பாடியிருக்கிறார். காண்க – மங்கலம். ( மங்களமில்லை )

 4. நச்சுன்னு ஒரு பாட்டு, நச்சுன்னு பேசு என்பது தவறு. நச்சு என்றால் நஞ்சு (விஷம்). நச்சுன்னு ஒரு பாட்டு என்றால் விஷம் போன்ற ஒரு பாட்டு என்று பொருள்.

 நறுக்கென்று என்பதே நச்சுன்னு என்று மருவி வந்துள்ளது. நான் நறுக்கென்று சொல்லிவிட்டேன். சுருக்கென்று எடுத்துக் கொள்க…

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!