தேசிய விருது வென்ற முதல் தெலுங்கு நடிகர்
புஷ்பா படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 69வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.
இதில், 2021ம் ஆண்டு வெளியான 'புஷ்பா தி ரைஸ்' படத்தில் நடித்திருந்த அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நேற்று தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கைகளால் பதக்கத்தையும், சான்றிதழையும் நடிகர் அல்லு அர்ஜுன் பெற்று கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும், 68 ஆண்டுகளில் இதுவரை எந்த தெலுங்கு நடிகரும் தேசிய விருதை பெறாத நிலையில் அல்லு அர்ஜூன் இந்த சாதனையை பெற்றிருக்கிறார்.
Love mundu huge achieve chesthey ah high a veru @alluarjun 🔥
— Sumanth (@SumanthOffl) October 17, 2023
Sneha - Arjun ❤️#AlluArjunTriumphsAtNationals #AlluArjun #Pushpa2TheRulepic.twitter.com/A0k252KBJT