இஸ்ரேலுக்கு படையெடுக்கும் உலக நாடுகளின் தலைவர்கள்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் இந்த வாரம் இஸ்ரேலுக்கு விஜயம் செய்ய உள்ளார் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வாரம், இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் ஹமாஸின் தாக்குதல்களைத் தொடர்ந்து இஸ்ரேலிய மக்களுக்கு ஒற்றுமையைக் காட்ட இஸ்ரேலுக்குச் சென்றிருந்தார்.
அதேபோல் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று (18.10) இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், பிரதமர் ரிஷி சுனக்கும் பயணிக்கவுள்ளார்.
முன்னதாக ரிஷி சுனக், சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் இஸ்ரேல் மற்றும் காசாவில் உள்ள பதட்டமான சூழ்நிலை குறித்து உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.