பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு சேவை நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#news
Thamilini
2 years ago
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும் 03 வாரங்கள் சேவை நீடிப்பு வழங்குவதற்கான தீர்மானத்தை அங்கீகரிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சபை நேற்று (17.10) கூடிய நிலையில், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அரசியலமைப்பு சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மாற்றி பொலிஸ் மா அதிபரை மீண்டும் பணியில் அமர்த்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பொலிஸ் மா அதிபரை மீண்டும் நியமிப்பது தொடர்பான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அனைத்து உத்தரவுகளையும் சீனாவின் பெய்ஜிங்கில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.