தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் உயிரிழப்பு
#Death
#Attack
#leader
#Hamas
#Gaza
Prasu
2 years ago
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் காசா மீது ஏவுகணை வீசி தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டுள்ளார் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு முக்கிய தலைவராக செயல்பட்டு வந்தவர் ஒசாமா அல் மசினி. இவர் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக்கைதிகளாக பிடித்து வரப்படுபவர்களை கையாளுதல் மற்றும் பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒசாமா அல் மசினி பலியானார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.