இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் குறித்து பென்டகன் வெளியிட்ட அறிவிப்பு!
#world_news
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க இராணுவம் 2,000 துருப்புக்களை தயார் நிலையில் வைத்துள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், "மத்திய கிழக்கில் உருவாகி வரும் பாதுகாப்பு சூழலுக்கு விரைவாக பதிலளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
" பணியாளர்கள் மற்றும் பல பிரிவுகளை "ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கு தயார்படுத்துவதன் மூலம் ஒரு உயர்ந்த தயார் நிலையில் இராணுவத்தினர் இருப்பதாக பென்டகன் மேலும் தெரிவித்துள்ளது.