‘லியோ’ படத்தின் தெலுங்கு பதிப்பை வரும் 20-ந்தேதி வரை வெளியிட தடை!
#Cinema
#Actor
#TamilCinema
#Director
#Breakingnews
#ImportantNews
#Movie
#AndhraPradesh
Mani
2 years ago
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 'லியோ' படத்தின் தொடக்கக் காட்சியை தமிழகத்தில் காலை 9 மணிக்கு திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'லியோ' என்ற பெயரை தனது தெலுங்கு பதிப்பிற்கு பயன்படுத்த தடை விதிக்க கோரி ஐதராபாத் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் லியோ படத்தின் தெலுங்கு பதிப்பை வரும் 20ம் தேதி வரை வெளியிடுவதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.