லெபனானில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது : இலங்கை பெண் ஒருவரும் சிக்கியுள்ளதாக தகவல்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
லெபனானில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் இலங்கை பெண் ஒருவர் சிக்கியுள்ளதாக அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது.
குறித்த கட்டடத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 05 பேர் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களில் இலங்கை பெண் ஒருவரும் உள்ளடங்குவுதாக தெரிவிக்கப்படுகிறது.