இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் இலங்கைப் பெண் பலி!
#SriLanka
#Death
PriyaRam
2 years ago
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் பின்னர் காணாமல் போயிருந்த இலங்கையை சேர்ந்த பெண் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
களனி ஈரியவெடிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட அனுலா ரத்நாயக்க (ஜயதிலக்க) என்பவரே தாக்குதலின் போது உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் பொலிஸார் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் சடலம் இரண்டு நாட்களுக்குள் இலங்கை தூதரகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.