30 கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன் ஒருவர் கைது!
#SriLanka
#Arrest
#Police
#Crime
Mayoorikka
2 years ago
30 கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன் ஒருவர் மாலம்பே அரங்கல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வலன மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
கண்டியில் உள்ள பிரசித்தி பெற்ற விகாரைக்கு சொந்தமான இந்த வலம்புரி சங்கை பிரபல சிற்பி ஒருவரால் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாக பாணந்துறை வலன மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப் படையின் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்திக வீரசிங்க தெரிவித்தார்.

இந்த வலம்புரி சங்கை அதே பெயரில் விற்பனை செய்ய சிற்பியை இடைத்தரகராக பயன்படுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.