தனுஷ்க குணதிலக்க தொடர்பில் கிரிக்கெட்டின் மூத்த அதிகாரி வெளியிட்டுள்ள தகவல்!
#SriLanka
#Srilanka Cricket
#Cricket
#sports
Mayoorikka
2 years ago
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் கடந்த வருடம் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தின் போது பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் தனுஷ்காவிற்கு இலங்கை கிரிக்கெட் இந்த தடையை விதித்தது, மேலும் அந்த குற்றச்சாட்டில் இருந்து தனுஷை அவுஸ்திரேலிய நீதிமன்றம் அண்மையில் விடுவித்தது.

தனுஷ்கவின் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கட் நியமித்த மூவரடங்கிய குழு குற்றச்சாட்டில் இருந்து தனுஷ்கவை விடுவிக்குமாறு சிபாரிசு செய்திருந்தது.
இந்நிலையில், தனுஷ்கவின் தடையை நீக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் செயற்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.