மின் கட்டண அதிகரிப்பைக் கோரும் மின்சாரசபை - தரவுகள் பொருத்தமற்றவை என்கிறது ஆணைக்குழு!
#SriLanka
#Electricity Bill
PriyaRam
2 years ago
மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் சமகாலத்திற்கு பொருந்தாதவை என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைய செப்டம்பர் மாதத்தில் நாளாந்த மின் தேவை 44.7 ஜிகாவாட் என கணிக்கப்பட்டுள்ள போதிலும், நாளாந்த மின் தேவை 41.01 ஜிகாவாட் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் நீர் மின் உற்பத்தித் திறனும் மின்சார சபையினால் குறிப்பிடப்பட்ட அளவை விட அதிகரித்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.