மக்கள் தேர்தலைக் கோரவில்லை வரிசை யுகத்தை இல்லாது செய்யவே கோருகின்றனர்!
அதிகாரத்திற்கு வரத்துடிக்கும் தரப்பிற்கே தற்போது தேர்தல் அவசியமாக இருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் உண்மையில் தேர்தல் ஒன்றைக் கோருகிறார்களா என்ற கேள்வி எழுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
மக்கள் வரிசை யுகத்தை இல்லாது செய்து பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் என்றே கோரியிருந்தார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தாம் நிவர்த்தி செய்து வருவதாகவும், ஆனால், தற்போது தேர்தலை கோருவது அதிகாரத்திற்கு வரத்துடிக்கும் தரப்பு எனத் தெரிவித்துள்ளார்.
இவர்களின் வேண்டுகோளை விட, தமக்கு மக்களின் உயிரே முக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு இன்று நிம்மதியாக சுவாசிக்கும் சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதேபோல, அவர்களின் வாக்குரிமையையும் தாம் பாதுகாப்போம் எனவும், இது தொடர்பாக யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.