தினேஷ் ஷாப்டரின் சடலத்தை அடக்கம் செய்ய அனுமதி

#SriLanka #Colombo #Court Order
Prathees
2 years ago
தினேஷ் ஷாப்டரின் சடலத்தை அடக்கம் செய்ய அனுமதி

விசாரணைக்காக தோண்டியெடுக்கப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலத்தை அடக்கம் செய்ய அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

 இதன்படி, கொழும்பு ஜவத்தை மயானத்தில் உயிரிழந்தவரின் மனைவியினால் கொள்வனவு செய்யப்பட்ட காணியில் அவரது சடலத்தை அடக்கம் செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.

 ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் மருத்துவக் குழு தகனம் செய்வது பொருத்தமற்றது என முன்வைத்த பரிந்துரைகளை பரிசீலித்த மாஜிஸ்திரேட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 விசாரணைகளை மீண்டும் 31ஆம் திகதி கூட்டுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 அன்றைய தினம் விசாரணைகளை மேற்கொண்ட ஐவரடங்கிய மருத்துவக் குழுவின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!