சீமானின் கருத்துக்கு நாமல் கொடுத்த பதிலடி!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ஷவை விமர்சித்து பேசியிருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாமல் ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.
பொதுவாக மகிந்த ராஜபக்ஷ திருப்பதில் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இதனை விமர்சித்தே சீமான் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய நாமல் ராஜபக்ஷ, “திருப்பதிக்கும், நல்லூருக்கும் எனது அப்பா செல்வார். அது எனது நம்பிக்கை. தமிழர்களின் வாக்குகள் கிடைக்கவில்லை என்று நாங்கள் கவலையடைவில்லை.
அடுத்த தலைமுறையினர் தேசிய அரசியல் கட்சிகளுக்கு வாக்களிப்பார்கள். எனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழர்களுடன் இணக்கமாகவே செற்படுகின்றார்.
தமிழ் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் மதிக்கிறார். அவற்றைப் பின்பற்றுகிறார். நாங்கள் நல்லூர் கோவிலுக்கும் செல்வோம். சகல இந்து மற்றும் ஏனைய மத ஸ்தலங்களுக்கும் செல்வோம். எனது தந்தை இந்தியாவுக்கு வருகை தந்தால் திருப்பதி ஆலயத்தை தரிசிக்காமல் செல்ல மாட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.