பாலஸ்தீனத்தை ஆதரித்து நியூயார்க்கில் பாரிய ஆர்ப்பாட்டம்!
#SriLanka
#world_news
#Lanka4
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்களின் பின்னணியில் பாலஸ்தீனத்தை ஆதரித்து ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் நியூயார்க்கில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்று குவிப்பதாக விமர்சித்துள்ளனர்.
மேலும், இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் ஆரம்பம் மட்டுமே என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதற்கும் இதன்போது, கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இஸ்ரேலை ஆதரிப்பதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வரும் பின்னணியில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நியூயார்க் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.