காஸாவில் இருந்து புறப்பட்ட வாகன தொடரணி மீது தாக்குதல்!
#SriLanka
#Attack
#Israel
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
வடக்கு காஸா பகுதியில் இருந்து புறப்பட்ட வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிபிசி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வடக்கு காசா பகுதியிலிருந்து வெளியேறும் பொதுமக்களின் வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இந்த காட்சிகளையும் பிபிசி பதிவேற்றம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா நகரின் புறநகர்ப் பகுதியில் இருந்து தெற்கே சில கிலோமீட்டர் தொலைவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தாக்குதலில் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாகவும், தாக்குதலால் பல வாகனங்கள் சேதமடைந்து எரிந்த நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.