இஸ்ரேலில் உள்ள 1600 ஆஸ்திரேலியர்களை மீட்க அரசாங்கம் நடவடிக்கை
#Flight
#Australia
#people
#government
#Israel
#War
#Hamas
Prasu
2 years ago
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நிலவிய நீண்ட கால மோதல் தற்போது போராக வெடித்துள்ளது. இதில் இரு தரப்பினரும் சரமாரி ஏவுகணை தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.
இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு பலியாகி உள்ளனர். போர் இன்னும் தீவிரம் அடைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. எனவே அங்கு சிக்கியுள்ள தங்களது குடிமக்களை மீட்கும் பணியில் ஒவ்வொரு நாடுகளும் தீவிர முயற்சி செய்து வருகின்றன.
அந்த வகையில் இஸ்ரேலில் சிக்கியுள்ள ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த சுமார் 1,600 பேர் தாயகம் திரும்ப உதவும்படி ஆஸ்திரேலிய அரசிடம் முறையிட்டுள்ளனர். அவர்களை மீட்டு கொண்டு வருவதற்காக இரு விமானங்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் இருந்து அந்த விமானங்கள் இயக்கப்படும் என ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.