அவிசாவளையில் இரட்டை கொலை வழக்கில் தல்துவ மகேஷ் கைது
முச்சக்கரவண்டியில் பயணித்த நான்கு இளைஞர்களில் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட தல்துவ மகேஷ், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று முன்தினம்(12ம் திகதி) கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் மறைந்திருக்கும் 'மன்ன ரமேஷ்' என்ற பாதாள உலக தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் தான் இரட்டை கொலையை செய்ததாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவிசாவளை பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் இந்த இரட்டை கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.