உலகக் கோப்பையை வெல்ல இன்னும் தாமதமாகவில்லை: விளையாட்டுத்துறை அமைச்சர்
#SriLanka
#Srilanka Cricket
Prathees
2 years ago
இலங்கை அணி இவ்வருட உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியை வெல்வதற்கு இன்னும் தாமதமாகவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் சிறப்பாக விளையாடி அவர்களை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அணிகளில் குறைபாடுகள் காணப்பட்ட போதிலும், மிகவும் திறமையான அணியொன்று போட்டிக்காக முன்வந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி விளையாடும் விதம் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.