பிலிப்பைன்ஸை தாக்கிய 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
#people
#Earthquake
#Phillipines
#2023
#Tamilnews
Mani
2 years ago
பிலிப்பைன்ஸ் தலைநகரம் மணிலாவின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரியன்டல் மீண்டோரோ மாகாணத்தில் உள்ள பியூர்டோ கலேரியா நகரில் இருந்து 31 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அங்கிருந்து வெளியேறினர். எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.