கண்டியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ராணுவ வீரர் கைது
#SriLanka
#Arrest
#kandy
#drugs
#Soldiers
#Sri Lankan Army
Prasu
2 years ago
கண்டி வில்லியம் கோபல்லாவ மாவத்தையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ஹெரோயினுடன் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்ணொருவ இராணுவ முகாமில் கடமையாற்றும் 39 வயதுடைய நபராவார்.
சந்தேக நபர் தொடர்பில் கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 470 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.