சர்ச்சைக்குரிய மருந்து கொள்வனவு தொடர்பில் சுகாதார அமைச்சரின் உத்தரவு
#SriLanka
#Medical
Mayoorikka
2 years ago
இலங்கைக்கான மருந்துப் பொருட்களை வழங்குவதில் சிக்கல் நிலையில் உள்ள ஐசோலெஸ் பயோடெக் பார்மாவுக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் உடனடியாக இடைநிறுத்தி, இரத்து செய்யுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்படும் விசாரணைகள் நிறைவடையும் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நிறுவனத்திற்கான அனைத்து கொடுப்பனவுகளையும் நிறுத்துமாறும், அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.