உலகின் இரண்டாவது மிகப் பெரிய இந்து கோவில் அமெரிக்காவில்!
#Hindu
#Temple
#United_States
PriyaRam
2 years ago
அமெரிக்காவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாப்ஸ் சுவாமி நாராயண் அக்ஷர்தாம் கோவில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய இந்து கோவில் என்ற பெருமையை பெற்றுள்ளது.
அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் 183 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இதன் நிர்மாணப் பணிகள், அண்மையில் நிறைவுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோவில் வளாகத்தில் 10,000 சிலைகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கோவில் எதிர்வரும் 18ஆம் திகதி பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.