இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலின் தற்போதைய களநிலவரம்!

2.5 மில்லியன் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காஸா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், உலகின் மிகப்பெரிய திறந்தவெளி சிறை முகாம் என்று என அழைக்கப்படும் இடத்தில் சிலர் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அங்கு வருகை தந்தவர்கள் இதுவரை இடம்பெற்ற இறப்புக்கள் குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளளனர்.
காசா பகுதிக்கான உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியதை அடுத்து, அங்கு இயங்கி வந்த ஒரேயொரு மின் உற்பத்தி நிலையமும் எரிபொருள் இல்லாமல் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காசா பகுதியில் உள்ள மருத்துவமனைகள் மருந்து மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன, மேலும் பலத்த காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
பாலஸ்தீன சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, காசா பகுதியில் பலஸ்தீனியர்களின் இறப்பு எண்ணிக்கை 1,200 ஆக உயர்ந்துள்ளது, மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,600 க்கும் அதிகமாக உள்ளது.
வார இறுதியில் ஹமாஸ் நடத்திய இஸ்ரேலின் ஆயுதத் தாக்குதல்களில் சுமார் 1,300 பேர் கொல்லப்பட்டனர். மற்றும் 3,300 பேர் காயமடைந்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபை இன்று (12.10) காலை வெளியிட்ட அறிக்கைகளின்படி, காசா பகுதியில் இடம்பெயர்ந்த பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 338,934 ஆகும்.
தொடர் இஸ்ரேலிய குண்டுவீச்சினால் காசா பகுதியில் குடியிருப்பு கட்டிடங்கள் உட்பட அனைத்து உள்கட்டமைப்புகளும் நாசமடைந்துள்ளதாகவும், மருத்துவமனை சவக்கிடங்கில் இடமில்லாததால் இறந்த உடல்கள் தரையில் கிடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



