தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகள் போக்குவரத்து வழமைக்கு திரும்பின!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகள் போக்குவரத்து வழமைக்கு திரும்பின!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகள் வழமை போன்று இயங்கும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பின்னடுவிற்கும் இமடுவிற்கும் இடையிலான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை பட்டிருந்த நிலையில், அதனை சீர் அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில், கொழும்பில் இருந்து செல்லும் பேருந்துகள் பின்னாடியில் இருந்து புறப்பட்டு, இமடுவில் இருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மீண்டும் நுழைகின்றன. 

மேலும், மாத்தறையிலிருந்து பயணிக்கும் பேருந்துகள் இமடுவிலிருந்து வெளியேறி பின்னாடியிலிருந்து அதிவேக நெடுஞ்சாலையில் மீண்டும் நுழைகின்றன. 

இதனையடுத்துஅதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் பாதைகள் எதுவும் இரத்து செய்யப்படவில்லை என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!