வைரலாகும் ஜிகர்தண்டா - 2 படத்தின் 'மாமதுர' முதல் பாடல் வெளியானது

#Cinema #Actor #Actress #TamilCinema #Director #release #2023 #trailer #Tamilnews #Movie
Mani
2 years ago
வைரலாகும் ஜிகர்தண்டா - 2 படத்தின் 'மாமதுர' முதல் பாடல் வெளியானது

'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து படத்தின் முதல் பாடலான 'மாமதுர' வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த பாடலை ஜி.வி. பிரகாஷ் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

'மாமதுர அன்னக்கொடி' என்று தொடங்கும் பாடலை சந்தோஷ் நாராயணன் தனது மகள் தீ உடன் இணைந்து பாடியுள்ளார். தற்போது இந்த பாடல் சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!