சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்தின் டீசர் வெளியானது

#India #Cinema #TamilCinema #2023 #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்தின் டீசர் வெளியானது

ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயலான்’ திரைப்படத்தின் டீசர் வெளியானது. அயலான் திரைப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

காலநிலை மாற்றம், வேற்று கிரக ஜீவராசி, அன்னிய உலகம் போன்ற அறிவியல் நிகழ்வுகளின் கூறுகள் அடிப்படையில் இத்திரைப்படம் அமைந்திருப்பதாக தெரிகிறது. இருப்பினும், வெகுசன மக்களை கவரும் வகையில், நகைச்சுவையுடன் படமாக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து, இன்று சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. எதிர்வரும், 2024ம் ஆண்டு பொங்கல் நாளன்று திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!