லியோ' படத்தின் டிரைலர் மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை!

#Cinema #Actor #TamilCinema #Vijay #Tamilnews
Mani
2 years ago
லியோ' படத்தின் டிரைலர் மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் லியோ. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதையடுத்து இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியான இந்த டிரைலர் சில மணி நேரங்களிலேயே 30 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!